சோழவந்தான், சோழவந்தான் நாடார் தெரு பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா துவங்கியது. விழாவையொட்டி மார்ச் 25 காலை 7:00 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்தல், 26ல் பூச்சொரிதல் விழா, 28 காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல், 29 மாலை 6:30 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், அம்மன் வீதிஉலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.