கண்டமங்கலம்: சின்னபாபுசமுத்திரம் திரவுபதையம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கண்டமங்கலம் ஒன்றியம் சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் திரவுபதையம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தீமிதி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. 26ம் தேதி தொடங்கி, 29ம் தேதி வரை, நான்கு நாட்கள் தெருக்கூத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி, காலை 10 மணிக்கு மேல், மதியம் 12 மணிக்குள் அர்ச்சுணன்-திரவுபதையம்மன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா, வரும் 30ம் தேதி, மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சின்னபாபுசமுத்திரம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.