பதிவு செய்த நாள்
22
மார்
2018
01:03
ஓசூர்: ஓசூர் அடுத்த, பாகலூரில், பழமையான கிராம தேவதை கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், தேர்த்திருவிழா, கடந்த, 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான நேற்று, தேர்த்திருவிழா நடந்தது. உற்சவருக்கு அலங்காரம் செய்து, மேள, தாளத்துடன், கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில், முக்கிய வீதிகள் வழியே, பக்தர்கள் இழுத்துச் சென்றனர். இதில், ஓசூர், பேரிகை, சம்பங்கிரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை, இரவு பூங்கரகம் மற்றும் வாண வேடிக்கைகளுடன், பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.