பதிவு செய்த நாள்
23
மார்
2018
12:03
கோவை; பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ஏப்., 2 முதல் கோவையிலிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில், குண்டம் திருவிழா, ஏப்., 3ல் நடக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் செல்ல வசதியாக, அரசுப் போக்குவரத்துக்கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து, பண்ணாரியம்மன் கோவிலுக்கு, ஏப்., 2 முதல், 3 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து, 90 பஸ்களும், திருப்பூரிலிருந்து, 60, ஈரோட்டிலிருந்து, 125, ஊட்டியிலிருந்து, 30 பஸ்கள் என, மொத்தம், 305 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விரு நாட்களிலும், பஸ்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.