பதிவு செய்த நாள்
26
மார்
2018
01:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நாளை தெப்போற்சவம் நடைபெறுகிறது. அம்மனின், 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், காமகோடி சக்தி பீடமாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில், மூன்று நாட்கள் நடக்கும் தெப்போற்சவம், நாளை மாலை, 6:00 மணிக்கு துவங்குகிறது. 29ல் நிறைவடைகிறது. மலர் அலங்காரத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளி, மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பஞ்சகங்கை தீர்த்தம் எனப்படும், கோவில் தெப்ப குளத்தில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்கின்றனர்.