மானாமதுரை : மானாமதுரையில் தல்லாகுளம் முனியப்பசாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.மானாமதுரை ஊர் எல்லையில் ஆலமரத்தடியில் சூலாயுதங்கள் வடிவில் அருள்பாலித்து வரும்இந்த கோவிலை மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின் போது அகற் றக்கூடாது போராடியதை அடுத்து கோயிலை அகற்றாமல் ரோடு போடும் பணி நடந்தது. தற்போது கோயில் திருப்பணி நிறைவுபெற்று கோயிலில் நேற்று காலை 9:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அந்த பழமையான ஆலமரத்தின் அடியில் பல்வேறு வகையான அபிஷேகங்களும்,ஆராதனைகளும் நடைபெற்றன. மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.