* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு. * பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே சிறந்த வழி. * புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன். * ஆசையை ஒழித்தால், துன்பம் தாமரை இலை தண்ணீர் போல எளிதில் கீழே விழுந்து விடும். * உலகத்தை வெல்வதை விட நம்மை நாமே வெல்வது தான் சிறந்த வெற்றி. * எளிமையாகவும் கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்டதன் அடையாளம். * தடைகள் இல்லாவிட்டால், மனம் நிதானத்தை இழந்து அகந்தை கொண்டு விடும். * உடல், நாக்கு, மனத்தை அடக்கி ஆள்பவரே உண்மையான அடக்கம் உடையவர். * தான் எனும் அகந்தை இல்லாதவனை யாராலும் வெல்ல முடியாது. * பிறரை இகழ்தல் என்பது வானை நோக்கி எச்சில் உமிழ்தலை போன்றது. * ஒருவனுக்கு வரும் நன்மை, தீமைக்கு அவனது செயல்களே காரணம். விடை சொல்கிறார் புத்தர்