பதிவு செய்த நாள்
31
மார்
2018
12:03
பாகூர்: பாகூர் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தி கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பாகூர் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது.
தினமும் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன், அகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான காவடி மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப காவடி சுமந்தும், அலகு குத்தி, தேர், வேன், கிரேன் ஆகிய வாகனங்களை இழுந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விழாவில் பாகூர், பரிக்கல்பட்டு, சேலியமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங் களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.