காரியாபட்டி: மல்லாங்கிணர் ஸ்ரீ செங்கமலவள்ளி தாயார் சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில்பங்குனிவிழாவில், பொங்கல் வைத்து, அக்னி சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்தல், சிறப்புபூஜைகள் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர்.
முக்கிய நிகழ்ச்சியாக சென்னகேசவபெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று(மார்ச் 30)ல்நடந்தது. தேர் வடம் பிடித்து முக்கிய தெருக்கள் வழியாக பக்தர்கள் இழுத்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.