அனுப்பர்பாளையம் : பெருமாநல்லுார் கொண்டத்துகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயக்கால் நடுதல், தேர் முகூர்த்தத்துடன் கடந்த 23ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, 28ல் கொடியேற்றம்; ஏப்ரல், 1ல் பொங்கல் விழா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று (ஏப்., 3ம் தேதி) காலை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.