பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
02:04
ப.வேலூர்: ப.வேலூர், மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது. ப.வேலூர், மகாமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பங்குனியில் நடைபெறுவது வழக்கம். விழா, கடந்த, 18ல் துவங்கியது. 25ல் மறுகாப்பு, 26 முதல், ஏப்.,1 வரை தினசரி இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்குமேல் நிலை சேர்ந்தது. டி.எஸ்.பி., சுஜாதா தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று இரவு பொங்கல், மாவிளக்கு பூஜை; நாளை அதிகாலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல்; வரும், 6 மாலை மஞ்சள் நீராடல் நடக்கிறது.