Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம் ரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:09

மற்றவர் நலனில் அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு  5-ல் இருக்கும் குரு பகவானும், 11-ல் சூரியனும்  இருப்பது சிறப்பான நிலையாகும். புதன் மே 4ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் சாதகமான பலன் தருவார். பெண்களால் நன்மை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சுக்கிரன் ஏப். 21 வரை 11-ம் இடத்தில் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். சூரியனால் சமூகத்தில் மதிப்பு உயரும். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும்.  குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சி நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை உண்டாகும்.  ஏப்.21,22ல் அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.  ஏப்.16,17, மே 14ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மை யும் கிடைக்கும். ஏப்.27,28ல் அவர்களின் வகையில் கருத்து வேறுபாடு வர வாயப்புண்டு. எனவே சற்று விலகி இருக்கவும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காணலாம். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். குருபகவானால் பொருளாதார வளம், சனிபகவானால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகும். நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். எனவே, புதியவர் களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். ஏப். 18,19,20,23,24ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மே 1,2,3ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் சீரான  முன்னேற்றம் காணலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசு வகை யில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர் களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும். இடமாற்ற பீதி இனி இருக்காது. குரு சாதகமாக இருப்பதால் வேலைப்பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. ஏப்.14,15 மே11,12,13 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். நடன கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு  கிடைக்கும். ஏப்.21க்கு பிறகு போட்டிகள் அதிகரிக்கும்.  அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பாராமல் பாடுபட வேண்டியிருக்கும். ஏப். 29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு புதன் சாதகமான இடத்தில் உள்ளதால் பிற்போக் கான நிலை மறையும். குருவால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களின்ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்ணை எதிர் பார்க்கலாம். மேல்வகுப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகள் போதிய மகசூல் கிடைக்கப் பெறுவர். ஆனால், கடினமாக உழைக்க  வேண்டியிருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.  விருப்பம் போல ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். மே4,5 ல் சகோதரர்களால் உதவி கிடைக்கும். ஏப். 25,26ல் ஆடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.

* நல்ல நாள்: ஏப்.14,15,16,17,18,24,25,26,27, 30 மே1,4,5,11,12,13,14
* கவன நாள்: மே 6,7,8 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 1,7,9 நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
* செவ்வாயன்று  துர்க்கைக்கு குங்கும அர்ச்சனை
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
* சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.