Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அபார ஆற்றல் பிறக்கும் சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அபார ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வளர்ச்சிக்கான மாதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:10

மனித நேயமுடன் நடக்க விரும்பும் கடக ராசி அன்பர்களே!

இந்த மாதம் முழுவதும் வளர்ச்சிக்கான சூழ்நிலை அமையப் பெறுவீர்கள். ஏப்.21க்கு பிறகு சுக்கிரனும், மே 3க்கு பிறகு புதனும், மே 1 வரை செவ்வாயும் நன்மையை வாரி வழங்குவர். 10-ம் வீட்டில் இருக்கும் சூரியன்,6-ம் வீட்டில் இருக்கும் சனிபகவான் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். செவ்வாய் 6-ம்  இடத்தில் இருப்பதால்  பொருளாதார வளம் பெருகும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டாகும். மே 4 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுப்பது நன்மையளிக்கும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். நினைத்த செயல் விரைவில் நிறை வேறும். மே3க்கு பிறகு பெண்களால் நன்மை கிடைக்கும். பொன்,பொருள் சேரும். சகோதரர்கள் அனுகூலமாக இருப்பர். குறிப்பாக மே  6,7,8ல் அவர்களால் நன்மை அதிகரிக்கும். ஏப்.18,19,20ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் அவர்கள் வகையில் ஏப்.29,30ல் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. அப்போது அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை காணலாம். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். மாத முற்பகு தியில்  முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். ஆனாலும் அஞ்சாது உழைத்தால் முன்னேற்றம் தானாகவே வரும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து மே 3க்கு பிறகு விடுபடுவர். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். ஏப்.21,22,25,26 ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஆனால் மே 4,5 ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  விண்ணப்பித்த கோரிக்கை நிறைவேறும். ஏப்.20க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சகஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். மாத முற்பகுதியில் வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஏப்,16,17, மே 14 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர், போட்டி முதலியன ஏப்.20க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பர். மே1,2,3ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். மே 3க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். தேர்வில் நல்ல மதிப் பெண்  கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.  விவசாயிகளுக்கு கரும்பு, எள், பழவகைகள், கிழங்கு வகைகள் போன்ற வற்றில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.  புதிய சொத்து மே 1க்குள் வாங்கலாம் வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.  பெண்கள்  குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர்.  கணவரின் அன்பும் அரவணைப்பும் கண்டு மனம் நெகிழ்வீர்கள். சிலர் குழந்தை பாக்கியம்  கிடைக்கப் பெறுவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணை யுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.  ஏப். 27,28 ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். ஏப்.23,24 ல் விருந்து விழா என செல்வீர்கள்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும்.மே 1க்கு பிறகு அலைச்சலால் சோர்வுக்கு ஆளாகலாம்.  

* நல்ல நாள்: ஏப்.16,17,18,19,20,23,24,27,28, மே 4,5,6,7,8,14
* கவன நாள்: மே 9,10 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்- 3,5 நிறம்:கருப்பு, வெள்ளை

* பரிகாரம்:
* ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
* பவுர்ணமியன்று அம்மனுக்கு நெய்தீபம்
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.