Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்)பிள்ளைகளால் பெருமை மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சுபநிகழ்ச்சி நடந்தேறும் மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
ரிஷபம்: ( கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குடும்பத்தில் குதூகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2018
12:08

பிறரை குறை கூற விரும்பாத ரிஷப ராசி அன்பர்களே!

ராகு 3-ம் இடத்தில் இருந்து சாதகபலனை வாரி வழங்குவார். 12-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ஏப்.21ல் உங்கள் ராசிக்கு வந்து நன்மை தருவார்.  பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. சமூகத்தில் அந்தஸ்து உயரும். சகோதரிகள்  ஆதரவுடன் செயல்படுவர். புதன் மே 4 வரை 11-ம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும். திட்ட மிட்டபடி சுபநிகழ்ச்சிகள் கைகூடும். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஏப்.14,15 மே 11,12,13ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.25,26ல் அவர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். குருவின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்  பண வரவு கூடும். தேவையான பொருட்களை தாராள பணச்செலவில் வாங்கலாம்.

அக்கம்பக்கத்தினரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். ஏப்.18,19,20ல் பெண்களால் கூடுதல் நன்மை காணலாம். அவர்களால் பொன், பொருள் சேரும்.  ஏப்.23,24ல் ஆடை, ஆபரணம் வாங்கலாம். தொழில், வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களின் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.  லாபம் படிப்படியாக உயரும். ஆனால், சூரியனால் திடீர் விரயம் ஏற்படலாம். ஏப்.21க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம்  ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. மே 4க்கு பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண்பிரச்னை, எதிரிபயம் ஏற்படலாம். சற்று கவனம் தேவை. ஏப்.16,17,21,22, மே14 ல் சிறு தடைகள் வரலாம். ஏப்.29,30ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.

பணியாளர்களுக்கு செல்வாக்கு உயரும். சக ஊழியர்கள் உதவிகர மாக செயல்படுவர். மே4க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சற்று முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சிலர் திடீர் இடமாற்றத்தை காண வாய்ப்புண்டு. அல்லது தற்காலிக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய திருக்கும்.  மே 9,10,11 ஆகிய நாட்களில் அனுகூலமான பலன் உண்டாகும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சியில் இருந்த தடை, பொருள் நஷ்டம் முதலியன ஏப்.21க்கு பிறகு மறையும். அதன் பிறகு முன்னேற் றமான பலன் உண்டாகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக பெண்கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர்.அரசியல்வாதி கள், சமூகநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ப பலன் காண்பர்.

ஏப்.27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். கல்வியில் சீரான முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  ஆனால் மே 4 முதல் புதன் சாதகமற்ற இடத்திற்கு செல்வதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப் பெறுவர்.  நெல், கேழ்வரகு, பழவகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானம் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

பெண்கள் குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்ந்த நிலை அடைவர். மே4க்கு பிறகு எதிலும் பொறுமையுடன் விட்டு கொடுத்து போகவும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஏப்.23,24,மே11,12,13ல்
நினைத்தது நிறைவேறும். மே1,2,3ல் சகோதரிகளால் நன்மை உண்டாகும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் மே1க்கு பிறகு பூரண குணம் அடையும்.  பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

* நல்ல நாள்: ஏப்.14,15,18,19,20,23,24,29,30 மே 1,2,3,9,10,11,12,13
* கவன நாள்: மே 4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்-6,8 நிறம்: நீலம், பச்சை.

* பரிகாரம்:
* சனியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம்
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.