குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவிலில், சண்டி ஹோமம் நடந்தது. குளித்தலை முத்து பூபால சமுத்திரம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 8:00 மணியிலிருந்து, 12:30 மணி வரை, பலவித ஹோமங்களுடன் சண்டி ஹோமம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றும், பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள், ஹோமம் தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.