பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
01:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமாரின், நூற்றாண்டு ஜெயந்தி விழா, கடந்த, நவ., மாதம் துவங்கி, ஓராண்டு தொடர்ந்து கொண்டாடப்பட்டு, ஆயிரம் கோடி, நாமாக்களை பகவானுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளன. நேற்று, பகவான் யோகிராம் சுரத்குமார் சன்னதிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்தும், அவரது உருவ சிலைக்கு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீமதி ஜானகி சுப்பிரமணியன் மற்றும் குழுவினரின், நாம சங்கீர்த்தன இசை நிகழ்ச்சியும், சங்கீத உபன்யாசமும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.