பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
01:04
திருவண்ணாமலை: வரும், 29 மற்றும், 30 ஆகிய தேதிகளில், சித்ரா பவுர்ணமி திதியில், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வர். அவ்வாறு வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய, நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காத்திருப்பர். அவர்களின் வசதிக்காக, பக்தர்கள் காத்திருக்கும் இடங்களில், மின் விசிறி அமைக்கும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டதால், பக்தர்கள் நிம்மதியடைந்தனர்.