பதிவு செய்த நாள்
17
ஏப்
2018
01:04
மோகனூர்: சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூர் அடுத்த வளையப்பட்டி ரெட்டையாம்பட்டியில், சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது.
நேற்று, மாவிளக்கு பூஜை, அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் அம்மனுக்கு, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மாலை, 3:00 மணிக்கு, குண்டம் இறங்கும் விழா நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, 7:00 மணிக்கு, பொங்கல் பூஜை, கிடா வெட்டு நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, கம்பம் பிடுங்கி கிணற்றில் விடுகின்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.