நெகமம்:நெகமம் அடுத்துள்ள, சிறுகளந்தை மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் கோவில் மகா கும்பாபிேஷக விழா இன்று நடக்கிறது.நெகமம் அடுத்துள்ள சிறுகளந்தையில், விநாயகர், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரைவீரன்சுவாமி கோவில் திருப்பணிகள் நடந்தது. கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிேஷக விழாவில் இன்று காலை, 8:30 - 9:30 மணிக்குள் வேதசிவாகம முறைப்படி கும்பாபிேஷகம் நடக்கிறது.