பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
01:04
பொங்கலுார்: நாடு சுபிட்சம் பெற வேண்டியும், மழை வேண்டியும், இந்து முன்னணி சார்பில், பொங்கலுாரில் அசுவமேத யாகம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி சார்பில், பொங்கலுாரில், அஸ்வமேத யாகம், வரும், டிச., 22, 23ல் நடக்கிறது. அதற்கான இடத்தை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் பார்வையிட்டு, ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார். அவர் கூறுகையில், நாட்டில் அமைதி நிலவவும், மக்கள் வாழ்வு சிறக்கவும், 1,008 கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வமேத யாகம் நடத்துகிறோம். இதில், ஒரு லட்சம் தம்பதியர் பங் கேற்கின்றனர், என்றார். மாநில தலைவர் காடேஸ் வரா, சுப்ரமணியம், மாநில செயலாளர்கள் கிஷோர் குமார், சண்முகசுந்தரம் உட் பட பலர் உடனிருந்தனர்.