பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
02:04
எலச்சிபாளையம்: ஜேடர்பாளையம், ஆதிநாகஅருளீஸ்வரர் கோவிலில், வரும், 29ல், திருக்கல்யாண உற்சவவிழா நடைபெறுகிறது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அடுத்த, ஜேடர்பாளையம் கருணாம்பிகை தாயார் உடனமர் ஆதிநாகஅருளீஸ்வரர் கோவிலில், வரும், 29ல், திருக்கல்யாண உற்சவவிழா நடக்கிறது. அன்று காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், யாகம் ஆரம்பம், சீர் அழைத்தல் நடக்கிறது. பின்னர், 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் கருணாம்பிகை உடனமர் ஆதிநாகஅருளீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண மாங்கல்யம் அணிவித்தல், புஷ்பமாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.