பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
12:04
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் கடந்த, 21ம் தேதி துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான கருட சேவை கோபுர தரிசனம், நேற்று, அதிகாலை, 4:00 மணிக்கு நடந்தது. வீதி புறப்பாடு, காலை, 5:30 மணிக்கு நடைபெற்றது. கருட வாகனத்தில் வீதியுலா வந்த வீரராகவரை, வழி நெடுக பக்தர்கள் தரிசித்தனர். டோல்கேட் தானப்ப நாயக்கன் மண்டபம் வரை சென்ற பெருமாள், மீண்டும் கோவிலுக்கு, காலை, 11:00 மணியளவில் திரும்பினார். திருமஞ்சனம், பிற்பகல், 3:00 மணிக்கும், ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் புறப்பாடு, இரவு, 8:30 மணிக்கும் நடைபெற்றது. இன்று காலை, 6:00 மணிக்கு, பரமபதநாதன் திருக்கோலத்தில், சஷே வாகனத்தில் பெருமாள் வீதி வலம் வருவார். பிரம்மோற்சவம் வரும், 30ம் தேதி வரை நடைபெறும். அதுவரை, உற்சவரர் வீரராகவர், பல்வேறு அலங்காரத்தில், காலை, மாலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.