பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
11:04
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் நடைப்பெற்று வரும், சித்திரை பிரம்மோற்சவத்தில், நேற்று காலை, பரமபதநாதன் திருக்கோலத்தில், சேஷ வாகனத்தில், பெருமாள் வீதியுலா வந்தார். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், 21ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று, பக்தி உலா, காலை, 10:00 மணிக்கும், ராமநவமியை முன்னிட்டு, ராமன் சன்னிதியில் பெருமாள் திருமஞ்சனம், நேற்று காலை, 11:00 மணிக்கும், நடைபெற்றது. ராமன் திருக்கோலத்துடன் பக்தி உலா, ஊஞ்சல் சேவை, மாலை, 5:00 மணிக்கும், சந்திரபிரபை புறப்பாடு, இரவு, 7:30 மணிக்கும் நடைப்பெற்றது. இன்று காலை, 4:00 மணிக்கு, நாச்சியார் திருக்கோலத்தில், பெருமாள் புறப்பாடும், யாளி வாகனத்தில் புறப்பாடு, இரவு, 7:00 மணிக்கும் நடைப்பெற்றது. ஏப்ரல், 30ம் தேதியுடன், பிரம்மோற்சவம் நிறை வடைகிறது.