பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
11:04
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில், கும்பாபிஷேகத்துகான யாகசாலை பூஜைகள் துவங்கின.இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், வரும், 27ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள், 20ம் தேதி மாலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. கும்பாபிஷேகத்துகாக, பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கால யாகசாலை பூஜைகள் நேற்று மாலை துவங்கின.இன்று, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் காலம் துவங்கி, கும்பாபிஷேகத்தினமான, 27ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜை, நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு மேல், 10:25 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.மாலை, 4:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.கும்பாபிஷேகம் காணவரும் பக்தர்களுக்கு, காலை, 11:00 மணிமுதல் அன்னதானம் வழங்க, நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.