பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
01:04
தலைவாசல்: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தலைவாசல், சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதையடுத்து, பெண்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி ஊர்வலம் வந்து, கோவிலை அடைந்தார். இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.
* மல்லூர், வெற்றி நகர் மாரியம்மன், மதுரை வீரன் கோவில் திருவிழா, நேற்று, நடந்தது. ஊர் பொதுமக்கள், சுனைக்கரடு அடிவாரத்திலிருந்து, மண்ணில் செய்யப்பட்ட குதிரைக்கு மாலை அணிவித்து, ஊர்வலம் எடுத்து, கோவிலுக்கு வந்தனர். ஏராளமான பக்தர்கள், குதிரை, மனித உருவம் கொண்ட சிறு மண் சிலையை, கோவிலுக்கு எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, பொங்கல் வைபவம் நடந்தது.