இடைப்பாடி: இடைப்பாடி, சிலுவம்பாளையத்தில், முதல்வர் பழனிசாமி குடும்பத்தினருக்கு சொந்தமான பழநியாண்டவர் கோவில் உள்ளது. அதன் கும்பாபிஷேகம் நாளை நடக்கவுள்ளது. இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்கவுள்ளார். நேற்று, கோவில் அருகிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து, முதல்வரின் மனைவி ராதா உள்பட, 500க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குடங்கள் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.