திருப்போரூர் கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 12:04
திருப்போரூர்: சித்ரா பவுர்ணமி விழா, திருப்போரூர் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவில், செம்பாக்கம் பாலா திரிபுர சுந்தரியம்மன் கோவில், கோவளம் கன்னியம்மன் கோவில், தண்டலம் பழண்டியம்மன் கோவில். மேலும், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடம் உள்ளிட்ட கோவில்களில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போல, நேற்றும் அனைத்து கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அவரவர் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம் எடுப்பது, அலகு குத்துவது உள்ளிட்டவையை நிறைவேற்றி, சுவாமியை வழிபட்டனர்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.