பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
12:04
சிங்கபெருமாள்கோவில்:சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்கோவிலில், நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில், புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெறும். இந்த ஆண்டு, நரசிம்மர் ஜெயந்தி விழா, நேற்றுமுன்தினம் இரவு, திருமஞ்சன விழாவுடன் துவங்கி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில், கவுத்துக நரசிம்மர், பிரகலாதவரதர் பூதேவி, மற்றும் ஸ்ரீதேவி உடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளினர். அதைத்தொடர்ந்து, இரவு, 7:00 - 9:30 மணி வரை, பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.