பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
02:04
தர்மபுரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தர்மபுரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் நகர் விநாயகர், வேல்முருகன் கோவிலில், பால் குடம், காவடி மற்றும் அலகு குத்தி, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இவ்விழாவை முன்னிட்டு, விநாயகர் மற்றும் வேல்முருகன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதேபோன்று, நெசவாளர் நகரில் உள்ள, மஹாலிங்கேஸ்வர் மற்றும் ஓம் சக்தியம்மன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூனேஸ்வரர், கல்யாண காமாட்சி, மற்றும் கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி மருதவானேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பள்ளக்கொள்ளையில் பழைய காளியம்மன் கோவில் தேரோட்டமும், பெரிய குரும்பட்டியில் காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.