பதிவு செய்த நாள்
02
மே
2018
12:05
கூவம்: கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சிக்குட்பட்டது உப்பரபாளையம். இங்கு, 1921ம் ஆண்டு, செல்வ விநாயகர் கோவில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கென தனிநபர் ஒருவரால், ஒதுக்கப்பட்ட நிலத்தின் அடிப்படையில், கோவிலில், தினமும் காலை - மாலை வேளைகளில் பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின், போதிய வருமானம் இல்லாததால், கோவிலில் நடத்தப்பட்ட பூஜைகள் குறைக்கப்பட்டு, தற்போது, தினமும், ஒரு வேளை பூஜை கூட நடத்த முடியவில்லை. இதனால், கோவில் மிகவும் பழுதடைந்து, மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஊராட்சி பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலை புதுப்பித்து, மீண்டும் பூஜைகள் நடத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.