திண்டிவனம்;திண்டிவனம் அருகே உள்ள லஷ்மி குபேர கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திண்டிவனம் வட்டம், மொளர் கிராமம், கோவடி ரோட்டில் லஷ்மி குபேர கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் வைஸ்வரணனுக்கும், சித்ரலோவுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு கோ பூஜையும், 10:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு வேள்வியும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.விழா ஏற்பாடுகளை, விஜயலஷ்மிகுபேர டிரஸ்ட் குபேர முருகன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.