பதிவு செய்த நாள்
09
மே
2018
11:05
காஞ்சிபுரம்: பாகவத சம்பிரதாய முறைப்படி, ஸீதா கல்யாண மஹோத்ஸவம், காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள, ஸீதாராம பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில், ஸீதா கல்யாண மஹோத்ஸவம் நடத்தப்படுகிறது. அதன்படி, 26வது ஆண்டு, ஸீதா கல்யாண உற்சவம், பெரிய காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில், விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ராமருக்கு லட்சார்ச்சனை நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தன்று காலை, 7:00 மணிக்கு பஜனையும், காலை, 10:00 மணிக்கு, பாகவத சம்பிரதாய முறைப்படி ஸீதா கல்யாணமும் விமரிசையாக நடந்தது. மாலை, சுவாமி வீதியுலாவும், தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவமும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.