பதிவு செய்த நாள்
09
மே
2018
11:05
அவிநாசி; அவிநாசியில் உள்ள ஷீரடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில், நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவிநாசி, பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்ரீசாய்பாபா கோவில் வளாகத்தில், திருப்பதி வெங்கடேச பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர், சுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி, ராஜ தியான கணபதி, தத்தாத்ரேயர், அமிர்தகடேஸ்வரவர் ஆகிய மூர்த்திகளுக்கு தனியாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் கும்பாபி ேஷக விழா கடந்த 4ம் தேதி, தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், துவங்கிய ஊர்வலம், நான்கு ரத வீதிகள், மங்கலம் ரோடு வழியாக சென்று கோவிலை அடைந்தது. அதன்பின், யாக பூஜைகள் நடந்தன. நான்கு கால யாக பூஜை முடிவில், கோவில் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின், ஸ்ரீ சாய்பாபா மற்றும் சன்னதிகளி லுள்ள மூலவ மூர்த்திகளுக்கும் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, கும்பாபிேஷக விழாவுக்கு, அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமை வகித்தார். யாகசாலை பூஜைகளை முரளி அய்யங்கார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். விழாவையொட்டி, கோபூஜை மங்கல ஆரத்தி, ஸ்ரீசாய் பஜன் நிகழ்ச்சிகள் நடந்தன. கும்பாபிேஷக விழாவில், அவிநாசி, திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த சாய் பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.