குஜிலியம்பாறை, டி.கூடலுாரில் பாதியில் நிற்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பணி பாதியில் பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். குஜிலியம்பாறை ஒன்றியம் டி.கூடலுாரில், கடைவீதி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.முன்னுாறு ஆண்டுகளுக்கு மேலான இக்கோயிலுக்கு ஏராளமானஏக்கர் நிலங்கள் உள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தஇக்கோயில் இடிக்கப்பட்டு, ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய கோயில் கட்டும் பணிகள் துவங்கின. இதற்காக கோயிலில் இருந்த சிலைகள், பூஜை சாமான்கள் அனைத்தும் பாதுகாப்பாக குடில் அமைத்துவைக்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளில் கற்களால் கட்டப்படும் கோயில் பணி என்பது மேல் மட்டம் வரையே வந்துள்ளது. அதற்கு மேல் சிலைகள் அமைப்பு பணிகள், முன்பகுதி பணிகள் பாதியில் நிற்கிறது. பா.ஜ.., மாவட்ட துணை தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கோயில் கட்ட ஆரம்பித்து7 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நிறைவு பெறவில்லை. இதுவரை ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளனர். கோயிலில் இருந்த விலை மதிப்பள்ள சிலைகள், ஐம்பொன் சிலைகள், பூஜைக்கானவெள்ளி பொருட்களின் உண்மை நிலை குறித்து, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரியும். கட்டுமான பணியும் முடியும், என்றார்.