பதிவு செய்த நாள்
10
மே
2018
11:05
சுந்தராபுரம்: சுந்தராபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலின், 36ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை நடந்தது. 1ம் தேதி இரவு கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல் மற்றும் கம்பம் போடுதல் ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம்இரவு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும், அன்னதானமும் நடந்தன. நேற்று காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகம், தீர்த்தகுடம், பால்குடம், பூவோடு ஊர்வலம் துவங்கி, மதியம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு அக்னி அபிஷேகமும், மதியம் அன்னதானமும் நடந்தன. மாலை, 4:00 மணி முதல் நடந்த பொங்கல், மாவிளக்கு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று காலை மஞ்சள் நீராட்டை முன்னிட்டு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மகா அபிஷேக ஆராதனை, அன்னதானத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்.