மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் உள்ள, மாகாளியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அதையடுத்து அக்னி கம்பம் நடுதல், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம் இரவு, குண்டம் திறந்து அக்னி வளர்க்கப்பட்டது. நேற்று காலை பவானி ஆற்றிலிருந்து, குதிரை வாகனத்தில் மலர் அலங்காரத்தில் கோவிலுக்கு அம்மன் அழைப்பு நடந்தது. கோவில் தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி குண்டத்துக்கு பூஜை செய்து, மலர் செண்டை உருட்டி விட்டு குண்டத்தில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், சக்தி கரகம், சிவன்கரகம் எடுத்து இறங்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள், சிறுவர், சிறுமியர் குண்டம் இறங்கினர்.