பழநி உண்டியலில் 27 கிலோ வெள்ளி : ரொக்கம் ரூ.1.66 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2018 11:05
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியலில் வழக்கத்தைவிட அதிகமாக 27 கிலோ வெள்ளிப் பொருட்கள் குவிந்துள்ளது. 22 நாட்களில் ரூ.ஒரு கோடியே 66 லட்சத்து 65ஆயிரம் வசூலாகியுள்ளது.
பழநி முருகன்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம் -990 கிராம், வெள்ளி 27 கிலோ 570 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 319, ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 66 லட்சத்து 65ஆயிரத்து 675 கிடைத்துஉள்ளது. வழக்கமாக 2 கிலோ முதல் முதல் 10 கிலோ வரை வெள்ளிப் பொருட்கள் கிடைக்கும். இம்முறை 27 கிலோவிற்கு மேல் கிடைத்துஉள்ளது.இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் சிவலிங்கம் மற்றும் வங்கி அலுவலர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.