பதிவு செய்த நாள்
10
மே
2018
02:05
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, ஆனங்கூரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கடந்த, 1ல் பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று, புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் சென்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 7ல் வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, காப்பு கட்டிய பின், கோவில் பூசாரி தினமும், இரவு, 8:00மணிக்கு மேல், தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், பெண்கள் அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு அபிஷேகம் செய்தனர். இரவு வாணவேடிக்கை நடந்தது. இன்று மதியம் மஞ்சள் நீராடலும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.