Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜோதிலிங்க தரிசனம் சிவ பக்தர்கள் ... மைவாடி மாரியம்மன் கோவில் தேரோட்டம் மைவாடி மாரியம்மன் கோவில் தேரோட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

12 மே
2018
11:05

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பவான் கோவில் பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று கோடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கடந்த 6ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், 10ம் தேதி அங்குரார்ப்பனம் நடந்தது. நேற்று தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ரிஷப கொடியேற்றமும், பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது. இன்று 12ம் தேதி முதல், 13ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை, சுப்ரமணிய சுவாமி உற்சவமும், 18ம் தேதி முதல் அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. 19ம் தேதி செண்பக தியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருளுதல், 21ம் தேதி பூத வாகனத்திலும், வரும் 22ம் தேதி யானை வாகனத்திலும், 23ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்கரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், 25ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது. வரும் 26ம் தேதி சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. 27ம் தேதி தெப்பல் உற்சவமும், 29ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா தலைமையில், அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar