பதிவு செய்த நாள்
12
மே
2018
11:05
மடத்துக்குளம்: மடத்துக்குளம், மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மைவாடி மாரியம்மன் திருவிழா நோன்பு சாட்டுதல் கடந்த மாதம் 24ம்தேதி நடந்தது. தொடர்ந்து கடந்த முதல் தேதி இரவு 1:00 மணிக்கு கம்பம் நடப்பட்டது. கடந்த 2ம் தேதி அம்மனுக்கு 18 வகையாக அபிேஷகம், மே 8ம் தேதி தீர்த்தம் செலுத்துதல், சக்தி கும்பம் எடுத்தல், 9ம் தேதி திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு, சிறப்பு ஆராதனை நடந்தன. நேற்றுமுன்தினம் அம்மன் வீதி உலா, தேரோட்டம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு கோவில் வாசலில் புறப்பட்ட தேர், ஊராட்சி மன்ற அலுவலக பகுதி, விநாயகர் கோவில் வளாகம், கணியூர் ரோடு, முக்கிய தெருக்கள் வழியாகச்சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது.திருவிழா நிறைவில் நேற்று மதியம், அம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது.