பதிவு செய்த நாள்
16
மே
2018
03:05
சென்னிமலை: ஒரேநாளில் மூன்று விசேஷங்கள் வந்ததால், கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
அமாவாசை, கிருத்திகை, வைகாசி மாத பிறப்பு என, நேற்று (மே 15)ல் மூன்று விசேஷங்கள் வந்தன. இதன் மகிமை அறிந்த மக்கள், கோவில்களுக்கு படையெடுத்தனர். குறிப்பாக முருக னுக்கு உகந்த நாள் செவ்வாய் கிழமை. இதே நாளில் மற்ற மூன்று அம்சங்களும் சேர்ந்து கொண்டதால், முருகன் கோவில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். சென்னிமலை மலை முருகன் கோவிலில், அதிகாலை முதலே, பக்தர்கள் குவியத் தொடங்கினர். காலை முதல் இரவு வரை, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.
* பவானி கூடுதுறைக்கு, பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். கூடுதுறை பரிகார மண்டபத்தில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல் உள்ளிட்ட பரிகாரங்களை செய்தனர். பின், காவிரி ஆற்றில் நீராடி, சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர்.