சாய் தபோவனத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2018 12:05
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், சுவாமி ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், பங்குனி மாதம் முதல் வியாழனை முன்னிட்டு, சிறப்பு ஆரத்தி மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை சாய்பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிதல் இருந்து பக்தர்கள் கொண்டு வந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மதியான் ஆரத்தி எனும் ஆரத்தி பாடப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வள்ளிபுரத்தில் இருந்து, இலவச வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.