பதிவு செய்த நாள்
21
மே
2018
01:05
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேரோட்ட திருவிழா, 15 நாட்கள் விமரிசையாக நடக்கும். முதல் நாள் நிகழ்ச்சியாக, அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலருக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அர்த்தநாரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நேற்று, சிவாச்சாரியார்கள், கொடியுடன் தர்ப்பை, மாவிலை மற்றும் மலர்கள், கூர்சரம் ஆகியவற்றை வைத்து கட்டி கொடியேற்றினர். நாளை அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவபெருமாள் உற்சவமூர்த்திகள், திருமலையில் இருந்து நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். வரும், 28ல் கைலாசநாதர் ஆலயத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின்னர், திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஜீன், 2ல் அர்த்த நாரீஸ்வர் பரிவார மூர்த்திகளுடன், திருமலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.