பதிவு செய்த நாள்
21
மே
2018
01:05
கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா, கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. பின், திருக்கம்பம் நடுதல், சந்தனகாப்பு, 108 திருவிளக்கு பூஜை, மாவிளக்கு, அக்னி கும்பம், அலகு குத்துதல், திருக்கம்பம் எடுத்தல், மஞ்சள் உற்சவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, ஊஞ்சல் உற்சவம், மறுபூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.