கிருஷ்ணராயபுரம்: திருகாம்புலியூரில், பகவதியம்மன் கோவில் திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருகாம்புலியூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைத்தல், நேற்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கிடா வெட்டுதல், திருத்தேரில் அம்மன் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.