பதிவு செய்த நாள்
26
மே
2018
05:05
சாயல்குடி: சாயல்குடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது மூக்கையூர். 1200 மீனவ குடும்பத்தினர் இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். மீன்பிடி தொழில் நிமித்தமாக ராமேஸ் வரம், பாம்பன், தங்கச்சிமடம், கோட்டைபட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று விடுகின் றனர்.
கடற்கரை கிராமமான மூக்கையூரில் கி.பி. 1700 ம் ஆண்டில் கட்டப்பட்ட தூய சந்தியாகப்பர் சர்ச், இன்று தனது கம்பீரத்தை இழக்காமல், வரலாற்றை பறைசாற்றிய நிலையில் இருந்து வருகிறது. மூன்று மாடி கட்டடத்தின் உயரத்தில், 50 அடி அகலத்தில் அமைந்துள்ளது.
சிறிய ரக செங்கற்கள், கருப்பட்டி, சுண்ணாம்பு, கடுக்காய் இவற்றின் சேர்மானத்தில் கட்டப் பட்டுள்ளது. போர்த்துக்கீசியர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட இந்த சர்ச்சில் 5 அடி தூய சந்தியா கப்பர் சொரூபம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சுண்ணாம்பு சிற்பத்தால் உருவாக்கப்பட்ட
வண்ணத்தில் ஆன இயேசு கிறிஸ்துவின் உருவச்சிலை பழமை வாய்ந்ததாகும்.
கடற்கரையின் உப்புக்காற்றால் எவ்வித சேதமும் இல்லாமல் நீண்ட நெடிய பழைமையை தன்னகத்தே கொண்டுள்ளது.மூக்கையூர் பங்குச்சந்தை எஸ்.லூர்துராஜ் கூறுகையில், பழமை யான இந்த சர்ச்சில் கடந்த 2007 ம் ஆண்டு வரை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தற்போது எதிரில் புதியதாக எழுப்பப்பட்ட சர்ச்சில் வழிபாடு நடந்து வருகிறது.
கிறிஸ்துவ தேவாலயங்கள் பெரும்பாலும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி இருக்கும், ஆனால் இந்த சர்ச்சின் முகப்பு மட்டும் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. குறிப்பிடத்தக் கதாகும். ஆரம்பத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட கட்டுப்பாட்டில் இருந்த கோவா நகரின் கோவன் குருக்கள் என்ற பாதிரியாரால் கட்டப்பட்டதாகும்.
தற்போது சிவகங்கை மறைமாவட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. 45 அடி உயர பிரமாண்ட மான ஒரே அறையாக உள்ளது. ஒரே சமயத்தில் 400 பேர் வரை அமர்ந்து பிரார்த்தனை செய்ய லாம்.பழமையான நினைவுச்சின்னமாக இதனை பராமரித்து வருகிறோம்.
நூற்றுக்கணக்கான புறாக்கள் இந்த சர்ச்சில் தஞ்சம் புகுந்துள்ளது. சர்ச்சினை தொல்லியல் துறையினர் பார்வையிட்டு சென்றுள்ளனர், என்றார்.