கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவில் குளிர்ச்சி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2018 03:05
கிருஷ்ணராயபுரம்: கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவில் குளிர்ச்சி திருவிழாவில், பால் குடம் ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்., கொம்பாடிப்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் குளிர்ச்சி திருவிழா நடக்கிறது. அதன் படி நேற்று நடந்த திருவிழாவில், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
*இதேபோல் வயலூர் பஞ்., கோடங்கிப்பட்டியில், பகவதியம்மன், பாம்பாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.