பதிவு செய்த நாள்
29
மே
2018 
12:05
 
 விருதுநகர் : விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் விழா மே 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு வெள்ளி சப்பரத்தில் அம்மன் வலம் வந்தார். மேலும் வெள்ளி ரிஷப வாகனம், பல்லக்கில் வலம் வருதல், ஊஞ்சலில் வீற்றிருத்தல் நடந்தன. இன்று பொங்கல்விழா நடக்கிறது. இதையொட்டி அம்மன் பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வர, மண்டபத்தில் வீற்றிருத்தல் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு பல்சுவை கதம்ப நிகழ்ச்சி, தங்ககுதிரை வாகனத்தில் அம்மன் வலம் வருதல் நடக்கிறது. நாளை கயிறுகுத்து, அக்னிசட்டி, கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், பல வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர் . இரவு கிராமிய கலை நிகழ்ச்சிகள், 9:00 மணிக்கு வெள்ள ரிஷப வாகனத்தில் அம்மன் வலம் வருகிறார். மே 31 ல் மாலை 4:00 மணிக்கு சித்திர ரதத்தில் அம்மன் வலம் வர தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 1 ல் மாலை 5:00 மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேர்சுவடு பார்த்தல் நிகழ்ச்சி நடக்கும். மே 2 ல் அம்பிகை மஞ்சள் நீராடி, நகர் வலம் வர கொடியிறக்குதல் , மே 3ல் அம்மன் குதிரை வாகனத்தில் நகர் வலம் வந்து ஊஞ்சலில் வீற்றிருத்தல் ,இரவு 9:00 மணிக்கு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வருதல் ,வாணவேடிக்கை நடைபெற உள்ளது.