பண்ணைக்காடு : பண்ணைக்காடு இராமசுவாமி கோயில் வசந்த கால வைகாசி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் மின்அலங்கார ரதத்தில்கருட வாகனத்தில் வீதி உலா, இரண்டாம் நாள் குதிரை வாகனத்தில் உலா, மூன்றாம் நாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்மின் ரதத்தில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயருடன் நகர் முழுக்க தேர் பவனி நடந்தது.மஞ்சள் நீராட்டுடன் சுவாமி சன்னதி வருதல் ஆகியனவும் நடந்தன. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.