பதிவு செய்த நாள்
30
மே
2018 
01:05
 
 திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், பிரதி செவ்வாய்க்கிழமை, மூலவருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். இதே போல், நகரி அடுத்த, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மாள் கோவிலில், மூலவரை திரளான பெண்கள் தரிசித்தனர்.